Category Archives: கோழிப்பண்ணை மேலாண்மை

கோழிப்பண்ணை மேலாண்மை

கோழிப்பண்ணை மேலாண்மை

கோழிப்பண்ணை மேலாண்மை என்பது நல்ல உற்பத்தியைப் பெறக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றிக் கூறுவதாகும். உற்பத்தித் திறனை அதிகரிக்க நல்லப் பராமரிப்பு முறைகளைக் குறைந்த செலவில் செய்தல் வேண்டும். இதுவே அறிவியல் பூர்வமான கோழிப்பண்ணை மேலாண்மையாகும்.

அடைக்காக்கும் வீடு

அடைக்காக்கும் இடம் அதிகத்தூசுகள் இன்றி, மழை மற்றும் ஒட்டுண்ணிகளிடமிருந்து குஞ்சுகளுக்குப் பாதுகாப்புத்  தருமாறு இருக்கவேண்டும். அடைகாப்புக் கொட்டிலில் கம்பி வலை பொருத்தப்பட்ட ஜன்னல்கள் அமைப்பது நல்ல காற்றோட்டத்திற்கு உதவும். அதிகத் தூசுகள் குஞ்சுகளுக்கு தூசுகளற்ற மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுத்தும். அதே போல் அதிக ஈரப்பதமும், கண் மற்றும் மூக்குக்குழலை பாதிக்கும் அம்மோனியா வாயு உற்பத்திக்கு … Continue reading

சுகாதாரம்

கொட்டகையிலிருந்து அகற்றக்கூடிய தீவன, நீர்த்தொட்டிகள், கருவிகள், கூளங்கள் போன்றவைகளை நீக்கிவிட்டு ஒரு நல்ல கிருமி நாசினியைப் பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்தி கொட்டகையை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். ஒட்டுண்ணி மற்றும் பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்த பூச்சி மருந்து தெளிக்கவேண்டும். பழைய கூளங்களை நீக்கிவிட்டபின் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. தேவைப்படின் சிறிய அளவில் பூச்சிக்கொல்லியைப் புதிய கூளங்களுடன் கலந்து பயன்படுத்தலாம். … Continue reading

கூளங்கள்

மரத்தூள், நெல் உமி போன்ற கிடைக்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தி 5 செ.மீ அளவிற்குக் கூளங்களை உருவாக்கவேண்டும். பூஞ்சாண் எளிதில் வளரும் பொருட்களைப் பயன்படுத்துதல் கூடாது. கூளங்கள் கட்டி பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறிவிடவேண்டும். அம்மோனியா வாயு உருவாகாமல் தடுக்க ஈரமடைந்த கூளங்களை உடனுக்குடன் அகற்றிப் புதிய கூளங்களை அவ்விடத்தில் போடவேண்டும்.

அடைகாப்பு வெப்பநிலை

அடைக்காப்பானில் வெப்பநிலை சரியாக இருக்க சூடுபடுத்துதல் வேண்டும். மிக அதிக அல்லது மிகக்குறைந்த வெப்பநிலை குஞ்சுகளின் வளர்ச்சியைப் பாதிக்கும் அடைகாக்கும் முதல் வாரத்தில் 95 டிகிரி ஃபாரன்ஹீட் (35 டி செ) இருக்கவேண்டும். பின்னர் இது வாரத்திற்கு 5 டிகிரி ஃபாரன்ஹீட் குறைக்கப்பட்டு 70 டிகிரி ஃபாரன்ஹீட் வரை கொண்டு வரப்படுகிறது. குஞ்சு பொரிக்கும் நிலையில் … Continue reading