Category Archives: இறைச்சிக்கோழி வளர்ப்பு

இறைச்சிக்கோழி வளர்ப்பு

இறைச்சி / கறிக்கோழி

இறைச்சிக் கோழிகள் என்பவை இறைச்சித் தேவைக்காக (கறிக்காக) வளர்க்கப்படுபவை. 6லிருந்த 8 வாரங்கள் வயதுடைய இளம் ஆண் மற்றும் பெண் கோழிகள் இறைச்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

பண்ணை / கொட்டகை அமைப்பு

ஒரு குஞ்சுக்கு 930 செ.மீ 2 என்ற அளவில் நல்ல காற்றோட்டமான இடவசதி தேவை. பிற கொட்டகைப் பராமரிப்புகள் முட்டைக் கோழிகளைப் போலவே பின்பற்றப்படுகின்றன.

உணவூட்டம்

2 வாரம் வரையிலும் 5 செ.மீ அளவும் 3 வது வாரத்திலிருந்து 10 செ.மீ அளவும் ஒரு குஞ்சுக்குக் கொடுக்கவேண்டும். குஞ்சு வளர வளர தீவன அளவை அதிகப்படுத்திக் கொள்ளலாம். தீவனத்தொட்டியை பாதிக்கு மேல் நிரப்பக்கூடாது. குழாய் தீவன முறையாக இருப்பின் 100 குஞ்சுகளுக்கு 12 கிலோகிராம் தீவனத்தை 3 முறையாகப் பிரித்து அளிக்கவேண்டும்.

இறைச்சிக் கோழித் தீவனக்கலவை

சேர்க்கும் பொருட்கள் சேர்க்கவேண்டிய அளவு ஆரம்பித்தல் (0-5 வாரங்களில்) முடிவில் (6-7 வாரங்களில்) மஞ்சள் சோளம் 47.00 54.50 தீட்டப்பட்ட அரிசி 8.00 10.00 சோயாபீன் துகள் 17.50 14.00 கடலைப்புண்ணாக்கு 15.00 11.00 உப்பின்றி உலர்த்தப்பட்ட மீன் 10.00 8.00 தாதுக்களின் கலவை 2.00 2.00 உப்பு 0.50 0.50 மொத்தம் 100.00 100.00 … Continue reading

நீர்

2×2 லிட்டர் கொள்ளளவுள்ள நீர்த்தொட்டியில் 2 வார வயதுடைய 100 குஞ்சுகளுக்கு வைக்கலாம். 3 வார வயதுடைய குஞ்சுகளுக்கு 2 x5 லிட்டர் அளவு கொண்ட தொட்டிகளில் அளிக்கவேண்டும். எப்போது புதிய, தூய தண்ணீரை வழங்கவேண்டும். அடைகாக்கும் தருணங்களில் சரியான கவனிப்பும் நீர் ஆகாரமும் அவசியம். குஞ்சுகளின் இறப்பு எண்ணிக்கை 2 சதவிகிதத்திற்கு அதிகமாக இருந்தால் … Continue reading