புதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு

 • குஞ்சுகளை வெளியிலிருந்து வாங்கும் போது முன்கூட்டியே கொட்டகைகளைத் தயார் செய்து விடவேண்டும்.
 • குஞ்சுகள் வந்தவுடன் வாகனத்தை உள்ளே செல்ல அனுமதிக்காமல் நுழைவாயிலேயே நிறுத்தி குஞ்சுகளை எடுத்துக் கொள்ளுதல் நலம்.
 • கொதிக்க வைத்து ஆற வைக்கப்பட்ட தண்ணீர் தயாராக இருக்கவேண்டும். 8 கிராம் குளுக்கோஸ், 0.51 எதிர் உயிர்ப்பொருள் அல்லது பாக்டீரிய எதிர்ப்பொருளை ஒரு லிட்டர் நீரில் கலந்து எலக்ரோலைட் விட்டமின் கலவை போன்றவற்றையும் சிறிதளவு சேர்த்து முதல் நாள் குஞ்சுகளுக்குக் குடிக்கக் கொடுக்கவேண்டும்.
 • எதிர்ப்பொருள்களும், விட்டமின்களும் 3-5 நாட்களுக்கு தொடரலாம்.
 • வெப்பக் கூட்டினுள் குஞ்சுகளை அனுப்புமுன் மருந்து கலந்த நீரை அளிக்கவேண்டும்.
 • ஏதேனும் விரிப்பைப் போட்டு அதில் சிறிது தீனியைப் போட்டு குஞ்சுகளை பொறுக்கவிடுவேண்டும். அப்போது குஞ்சுகள் ஒவ்வொன்றும் சரியான அளவு 40-48 கிராம் எடை இருக்கிறதா என்பதைக் கவனித்துக் கொள்ளவேண்டும்.
 • குஞ்சுகளை எண்ணிக் கொள்ளவேண்டும். அவற்றின் அலகை நீரில் நனைத்துப் பின் வெப்ப அடைப்பானுக்குள் விடவேண்டும்.
 • குஞ்சுகள் சுறுசுறுப்புடன் நல்ல ஆரோக்கியமாக தீவனம் எடுக்கிறதா என்பதை அடிக்கடிப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
 • ஆரோக்கியமற்ற, சரியான தீவனம் உட்கொள்ளாத, குறைபாடு உடையக் குஞ்சுகளை வாங்கியவரிடம் தந்து விட்டு அவற்றுக்குப் பதில் புதிய குஞ்சுகளை வாங்கிக் கொள்ளவேண்டும்.
 • சீமெண்ணெய் அல்லது நிலக்கரி அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் மணல் போட்டு சூடாக்கி அதக் கூண்டிற்குள் பரப்புவதன் மூலமும் வெப்பத்தை உருவாக்கலாம்.
 • சூடான சுருள் மூலமாகவும் வெப்பத்தை வழங்கலாம். கோழிக்குஞ்சுகளுக்கு எட்டாமல் சற்று உயரத்தில் வைக்கவேண்டும்.
 • குஞ்சுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வெப்பம் போதுமானதா என்று அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ளவேண்டும். முதல் வாரத்தில் 35 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அளிக்கப்படவேண்டும். வாரத்தில் 35 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அளிக்கப்படவேண்டும். பின்பு வாரத்திற்கு 5 டிகிரி செல்சியஸ் எனக் குறைத்துக் கொள்ளலாம்.
 • ஒரு தெர்மாமீட்டரை கூண்டுக்குள் பொருத்தி வைப்பதன் மூலம் வெப்பத்தை சரிபார்த்துக் கொள்ளலாம்.
 • குஞ்சுகளை வெப்பக்கூண்டிற்குள் அவ்வப்போது மேற்பார்வையிடவேண்டும். அவை விளக்குகளுக்கு அருகாமையில்  ஒன்றையொன்று நெருக்கிக் கொண்டு இருந்தால் அளிக்கப்பட்ட வெப்பம் போதுமானதாக இல்லை என்று அர்த்தம். மேலும் விளக்குகளைப் பொருத்தவேண்டும்.
 • குஞ்சுகள் விளக்கு எல்லையை விட்டுத் தள்ளிச் சென்றால் வெப்பம் அதிகமாக இருக்கலாம். எனவே வெப்பக் கூண்டைப் பரிசோதித்து வெப்பம் அதிகமாக இருந்தால் விளக்குகளை நீக்கலாம் அல்லது சற்று உயர்த்தி வைக்கலாம்.
 • கொடுக்கப்பட்ட வெப்பநிலை சரியாக இருந்தால் குஞ்சுகள் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் நகர்ந்து தீவனமுன்னும்.
 • மேலும் சில குஞ்சுகள் தலையை ஒரு புறம் சாயத்துக் கொண்டு ஓய்வு எடுக்கும். இவ்வாறு இருந்தால் அது நல்ல ஆரோக்கியமான சூழ்நிலை எனத் தெரிந்து கொள்ளலாம்.
 • ஆரம்பத்தில் வெளிச்சமானது 22 மணி நேரம் விளக்கு எரியவிடப்படும். இரவில் ஒரு அல்லது அரை மணி நேரம் மட்டுமே அணைக்கப்படுகிறது. பிறகு 3வது வாரத்தில் இரவில் மட்டுமே விளக்குகள் எரியவிடப்படுகின்றன. கோடைக்காலமாக இருந்தால் 1 வாரமும் குளிர்க்காலங்களில் 3 வாரம் வரையிலும் நீட்டிக்கப்படும்.

poultry_chicks
புதிதாக பொரிக்கப்பட்ட குஞ்சுகள்

This entry was posted in கோழிக்குஞ்சு பராமரிப்பு. Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


*