கூண்டு முறைப் பராமரிப்பு

Layer management
இம்முறையில் கோழிகளைக் கையாள்வது எளிது. குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் கோழிகளை வளர்க்கலாம். முட்டைச் சேகரிப்பு எளிது, ஒட்டுண்ணிகள் மற்றும் நோய்த்தொல்லை குறைவு. பயனற்ற கோழிகளைக் கண்டு நீக்குவது எளிது போன்ற பல்வேறு பயன்கள் கிடைக்கின்றன. எனினும் ஆரம்ப முதலீடு அதிகம், ஈரக்கழிவுகள், துர்நாற்றம், கொசு, ஈ போன்ற குறைபாடுகளும் உள்ளன. இவற்றில் சில பிரச்சனைகளுக்கு உயர்த்தப்பட்ட கூண்டு முறை சிறந்தது. 4 கோழிக் கூண்டு வீடுகள் பண்ணைக்குப் போதுமானது. நான்கு கூண்டு முறையின் அளவுகள் முறையே.

நீளம்                                   45 செ.மீ (முன்பக்கம்)
உயரம் (பின்பகுதியில்)        38 செ.மீ
உயரம் முன்பகுதியில்          42 செ.மீ
அகலம்                                42 செ.மீ

எனினும் உயரத்தை அளவிட 2 முறைகள் உள்ளன. கூண்டின் தரை முன்பகுதி நோக்கி சரிந்து இருக்கும். பொதுவாக முட்டையிடும் கோழிகளுக்கான தரையமைப்பு இணைக்கப்பட்ட கம்பி வலையாக இருக்கும். சில இடங்களில் இக்கம்பிகள் பிளாஸ்டிக் உறைகளைக் கொண்டிருக்கும். தரைக் கம்பி 14 கஜமுள்ள கம்பிகளாக இருப்பது சிறந்தது. வலைச்சல்லடை அளவு 2.5×5.0 செ.மீ (1 x2”) கூண்டின் முன்பக்கம் கூண்டையும் தாண்டி வலையமைப்பு சிறிது நீண்டிருக்கும். இதன் வழியே முட்டைகளை எளிதில் சேகரித்துக் கொள்ளலாம். இந்து நீண்ட அமைப்பு 18 செ.மீ தூரம் சற்று வளைந்து காணப்படும். குறைந்த அளவு இடத்தில் அதிக எண்ணிக்கையில் கோழிகளை வளர்க்க ஏதுவாக ஒரு அடுக்கு, இரண்டு மற்றும் 3 அடுக்கு வரை அமைத்துக் கொள்ளலாம்.

கூண்டானது தரையிலிருந்து 1 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கவேண்டும். எச்சங்களைச் சேகரிக்கக் கூண்டின் அளவிற்கேற்ப தரையில் 30 செ.மீ ஆழத்திற்கு குழி அமைத்தல் சிறந்தது.

நீளமான, தொடர்ச்சியான தீவனத் தொட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. நீரானது நீளவாக்கில் அமைக்கப்பட்ட குழாய் மூலம் தொடர்ச்சியாக வழங்கப்படவேண்டும். தீவனத் தொட்டிக்கு மேலே கூண்டிற்கு வெளிப்புறப் பகுதியில் நீர்க்குழாய்கள் செல்லுமாறு வைத்தல் வேண்டும். ஆங்காங்கு கீழே வரும் குழாய்களில் துளையிட்டு அடைப்புடன் நீர்த் தேவையான அளவு சொட்டுசொட்டாக வரும்படி வைத்தல் வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்தல் வேண்டும்.

This entry was posted in முட்டையிடும் கோழிகள். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


*