குஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி

இதற்கென சேவல்கள் தனியே பராமரிக்கப்படவேண்டும். 100 பெட்டைக் குஞ்சுகளுக்கென 15 சேவல் குஞ்சுகள் வளர்க்கப்படவேண்டும். இந்த 15 குஞ்சுகளில் 10 வார வயதில் 12 சேவல் குஞ்சை மட்டும் தேர்ந்தெடுக்கவேண்டும். கலப்பிற்காக எடைக் குறைந்த இனமாக இருந்தால் 10-15 பெட்டைக் குஞ்சுகளுடன் ஒரு சேவலையும், எடை மிகுந்த  இனமாக இருந்தால் 6-8 பெட்டைகளுக்கு ஒரு சேவலையும் விடலாம். கலப்பிற்கு விட்ட 2 வாரங்களுக்குப் பிறகு முட்டையை சேகரிக்கத் தொடங்கலாம்.
முட்டைகளை ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை சேகரிக்க வேண்டும். சேகரித்த முட்டைகளை 1016 டிகரி செல்சியஸ் வெப்பநிலையில் 70-80 சதம் ஈரப்பதமுள்ள இடத்தில் வைக்கவும். முட்டைகளின் எடை, நிறம், தன்மை, வடிவம் ஆகியவற்றைச் சரிபார்த்துப் பிரித்து  வைக்கவும். சேமித்து வைக்கும் போதும், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றும் போதும் கவனமாக அகண்ட பகுதியைத் தொட்டுக்  கையாளுதல் வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை அடை காக்கவோ அல்லது முட்டை சந்தைக்கோ அனுப்பி விடலாம். 1 வார காலத்திற்கு மேல் சாதாரண சூழ்நிலையில் அடை காக்கும் காலம் 21 நாட்களாகும். குஞ்சு பொரிப்பதற்கான குறிப்பிட்ட, காற்றோட்டமும், மித வெப்பநிலையும் கொண்ட சூட்டில் நிலவவேண்டும்.

This entry was posted in இறைச்சிக்கோழி வளர்ப்பு. Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


*